தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வீதியில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம்(19) இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 48க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலதிக விசாரணை
வெடிவிபத்தால் சாலையும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.