Jobs
oi-Mani Singh S
சென்னை: கன்னியாகுமரியில் சுகாதார பணியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சுகாதாரப்பணி துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணிப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?: அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15700 – 58100 (Level – 1) சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அதிகபட்சம் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன் அனுபவ சான்று ஆகியவற்றை விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? கன்னியாகுமரி மாவட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருப்பதற்கு சரியான தகவலை பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து மேற்கண்ட ஆவணங்களை விண்ணப்ப படிவத்தோடு இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாக 31.07.2023 என்ற தேதிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
துணை இயக்குநர்,
சுகாதாரப்பணிகள்,
கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் – 1.
ஒரே ஒரு பணியிடத்தை மட்டும் நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் https://kanniyakumari.nic.in/notice/recruitment-for-the-post-of-office-assistant-in-the-office-of-deputy-director-of-health-servicesnagercoil/ செய்யவும்.
அரசு வேலை! 6 ஆயிரம் பணியிடம்.. கை நிறைய சம்பளம்.. பட்டதாரிகள், பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
English summary
Notification has been issued to fill the vacant posts of Office Assistant in Health Staff Office Kanyakumari. Accordingly 8th class pass candidates can apply for these posts. See more details here.